Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடர் தோல்வியின் எதிரொலி: அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அசார் அலி

In கிாிக்கட்
Published: 06:56 GMT, Feb 10, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Anojkiyan
Azhar-Ali

தொடர் தோல்வியின் எதிரொலியாக கடும் விமசர்சனத்துக்குள்ளான பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி, தனது ஒருநாள் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதைதொடர்ந்து, ரி-ருவென்ரி அணியின் தலைவர் சர்பிராஸ் ஹமட் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், நியூசிலாந்து மற்றும அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

இதனால், மூன்று வகை கிரிக்கெட்டும் தனித்தானியான அணித்தலைவர்கள் இருப்பதால் வீரர்களின் ஒத்துழைப்பு மற்றும் அணுகுமுறை சிறப்பானதாக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எண்ணியது.

மேலும், அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் ஒரே நபரை அணித்தலைவராக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்பியது. இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg