Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க மாநிலச் செயலாளரை சந்தித்தார் பெடரிக்கா மொக்ஹெரினி

In ஐரோப்பா
Published: 06:35 GMT, Feb 10, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியறவுக் கொள்கைச் செயலாளர் பெடரிக்கா மொக்ஹெரினி (Federica Mogherini), நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்காவின் மாநிலச் செயலாளர் ரெக்ஸ் டிலர்சனை (Rex Tillerson) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றதாகவும், குறித்த இரு தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்களையும் மொக்ஹெரினி சந்தித்து உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றமையின் பின்னர் பெடரிக்கா மொக்ஹெரினி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன்  முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg