Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவல் உப்புமா

In
Updated: 07:30 GMT, Feb 10, 2017 | Published: 07:29 GMT, Feb 10, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Elakkiya
02-coconut-aval-upma

சத்துக்கள் நிறைந்த அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த அவல் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதனைத் தொடர்ந்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்;தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவலை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg