Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடர்: ஆஸி அணியிலிருந்து கிறிஸ் லைன் விலகல்

In கிாிக்கட்
Published: 07:19 GMT, Feb 10, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Anojkiyan
lyn

இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் லைன் விலகியுள்ளார்.

கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதனால், அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை துடுப்பாட்ட வீரர் பென் டங்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டங்க் கடந்த 2014ஆம் ஆண்டு தென்னப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்திருந்தார். அதில் 2, 23 மற்றும் 14 ஒட்டங்கள் எடுத்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிக் பாஷ் தொடரில் அதிக ஒட்டங்கள் குவித்ததால் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி மெல்பேர்னில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg