Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் ஜேர்மனியில் கைது

In உலகம்
Published: 07:39 GMT, Feb 10, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Sylviya

ஜேர்மனியின் சிறப்பு பொலிஸ் படையினர் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய திடீர் சோதனைகளின் போது ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

27 வயது மதிக்கத்தக்க அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் ஆகியோரே மேற்குறிப்பிட்டவாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸார், “ஜேர்மனியின் பல பகுதிகளில் நாம் மேற்கொண்ட 12 திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் இருந்த இடத்திலிருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் பாரிய கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்களின் சதித்திட்டம் தொடர்பான வேறெந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை முன்னெடுக்க சதித்திட்டம் தீட்டியதாக, கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் கிறிஸ்மஸ் சந்தையின் போது ஜேர்மனியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதுடன் திடீர் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg