Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணிலாவில் தீ விபத்து: 750 குடும்பங்களின் வீடுகள் தீக்கிரையாகின

In உலகம்
Published: 08:02 GMT, Feb 10, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Sylviya

மணிலாவில் வறிய மக்கள் அதிகளவில் வாழ்ந்து வந்த பகுதியொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 750 பேரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் சுமார் 4000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர், “எமது துரதிஷ்டம், எம் உடைமைகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகிவிட்டன. இனிமேல் நாம் என்ன செய்வோம்? எப்படி வாழ்வோம்? எப்படி நாம் இதை சமாளிக்கப்போகிறோம் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என கண்ணீர் விட்டுள்ளார்.

குறித்த தீ தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்த போது, திடீரென பரவியுள்ள இந்த தீ சுமார் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்ததாகவும் ஆனால் பொதுமக்களில் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg