Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து மேயுடன் ஜென்டிலோனி பேச்சுவார்த்தை

In
Updated: 12:43 GMT, Feb 10, 2017 | Published: 09:07 GMT, Feb 10, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Sylviya
09

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் இத்தாலிய பிரதமர் பௌலோ ஜென்டிலோனி (Paulo Gentiloni) ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த மே, பிரெக்சிற் நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் இறுதியில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெரேசா மே, “பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்ததையின் போது விரிவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வர்த்தகம் தொடர்பில் நான் இன்று ஜென்டிலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்” என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பியர்களின் நிலை குறித்து தற்போது எதுவித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது எனவும் மே தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த ஜென்டிலோனி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரித்தானியாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இத்தாலியுடன் வர்த்தகம் செய்யும் ஏழாவது பாரிய நாடாக பிரித்தானியா உள்ளதாகவும் அதன் மதிப்பு வருடாந்தம் 22 பில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg