Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியில் சம்பியன் வீரர்களை எம்மால் தயார் செய்ய முடியவில்லை: ஜயசூரிய

In கிாிக்கட்
Updated: 12:26 GMT, Feb 10, 2017 | Published: 11:21 GMT, Feb 10, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : Anojkiyan
dc-Cover-l209gugmegjk3gplp8oc1vasn2-20161201150614.Medi

முன்னாள் சம்பியன் வீரர்களை போல் இனிமேல் இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்களை தயார் செய்ய முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போதைய தலைமை தேர்வாளருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது படுமோசமாக விளையாடி வருகின்றது. இளம் வீரர்களை கொண்டுள்ள இவ் அணியானது முன்னாள் அணித்தலைவர்களான சங்ககரா, ஜயவர்தன ஆகியோரின் ஓய்வுக்கு பின் பலவீனம் அடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், அணிக்கு புதுமுக வீரர்கள் அறிமுகமானாலும் அவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இது குறித்து ஜயசூரிய கூறுகையில், ”இலங்கை வீரர்களின் திறமைக்கு பஞ்சம் என்று நான் எக்காரணம் கொண்டும் கூறமாட்டேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த சம்பியன் வீரர்களை போன்று சிறந்த வீரர்களை நம்மால் தயார் செய்ய முடியவில்லை.

பாடசாலை மற்றும் உள்ளூர் கட்டமைப்பில் குறைபாடு உள்ளதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் சிறந்த வீரர்களை உருவாக்கிய காலத்திலும் இதே கட்டமைப்புதான் இருந்தது. ஆகவே, எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். பின்னர் அதை சரி செய்ய வேண்டும்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg