Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

In இந்தியா
Updated: 10:55 GMT, Feb 10, 2017 | Published: 10:55 GMT, Feb 10, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Shailu
MK Stalin

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அலங்காநல்லூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட பின்னர் மதுரையிலிருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

‘தமிழகம் நலம் பெற்று விளங்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் விருப்பம். அதற்கு நிலையான ஆட்சி அமைவது முக்கியமான ஒன்று.

இப்போது மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளிலும் தமிழக அரசு நிர்வாகம் சீர்குலைந்து தான் இருந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசு நிர்வாகம் சொல்ல இயலாத அளவிற்கு நிலைக்குலைந்துள்ளது.

அதிலும் கடந்த ஒரு வாரமாக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் முழு தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg