Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனுஷூடன் ‘டூயட்’ பாட ஆசைப்படும் பெங்காலி நடிகை

In சினிமா
Updated: 11:37 GMT, Feb 10, 2017 | Published: 11:37 GMT, Feb 10, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Shailu
Dhanush - Misthi

அதர்வாவின் ‘செம போத ஆகாத’ படத்தில் நடிப்பவர் பெங்காலி நடிகை மிஷ்டி. இவர் மலையாளத்தில் ‘ஆதம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தனுசின் தீவிர ரசிகை என்று தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘நான் தனுஷ் நடித்த சில படங்களைப் பார்த்து அவரது தீவிர ரசிகை ஆகி விட்டேன். அவருடன் படத்தில் நடிக்க வேண்டும். ‘டூயட்’ பாட வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது.

தனுசுடன் உடனடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், தமிழில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின்னர் தனுஷூடன் இணைந்து நடிக்கும் முயற்சியில் நேரடியாக இறங்குவேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg