Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளின் அடுத்த அத்தியாயம் 5G

In தொழில்நுட்பம்
Updated: 11:41 GMT, Feb 10, 2017 | Published: 11:40 GMT, Feb 10, 2017 |
0 Comments
1068
icon_com
This post was written by : Elakkiya
5g_logo_official_1486643683968

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் நிலையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளின் அடுத்த அத்தியாயம் 5G தான் என்றும் அதற்கான சின்னமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்கான அடுத்த அத்தியாயத்தினை 3GPP செல்லுலார் ஸ்டான்டர்ட்ஸ் குழு உருவாக்கி வருகின்றது. இந்த குழுவில் ஜப்பான், தென் கொரியா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை தற்போதைக்கு பயன்படுத்த முடியாது எனினும்  2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவை பயன்பாட்டிற்கு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வயர்லெஸ் அத்தியாயம் 5G என அழைக்கப்படும் என்றும் இதற்கான சின்னமும் உருவாக்கப்பட்டுள்ளது. 5G என பெயரிடப்பட்டுள்ளதால் இது தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் 4G எல்டிஇ பிரான்டிங்கிற்கு அடுத்த தலைமுறை என்றே அறியப்படுகிறது.

வணிக ரீதியிலான வெளியீட்டுற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் நிலையில் 5G முற்கட்ட சிறப்பம்சங்கள் 2018 ஆம் ஆண்டளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பதிப்பின் முழுமையான அர்த்தம் தெரியவில்லை என்றாலும், 5G அம்சமானது 4G போன்று அதிவேகம் வழங்காமல் அதிக திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக திறன் வழங்கப்படும் போது ஸ்மார்ட்போன்களை கொண்டு இண்டர்நெட் ஆஃப்  சேவைகளை இயக்க ஏதுவாக இந்த தொழில்நுட்பம் வழி செய்யும் என்றும் கூறப்படுகிறது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg