Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது ஒபேரா

In தொழில்நுட்பம்
Updated: 11:48 GMT, Feb 10, 2017 | Published: 11:48 GMT, Feb 10, 2017 |
0 Comments
1154
This post was written by : Elakkiya

இதற்காக அதிவேகமான இணைய உலாவலைத் தரக்கூடிய புதிய பதிப்பினை ஒபேரா அறிமுகம் செய்துள்ளது.

டெக்ஸ்டாப் கணினிகளுக்காக 43வது பதிப்பாக வெளியாகியுள்ள இப் புதிய உலாவி குறைந்தளவு மின் பாவனை மற்றும் குறைந்தளவு முறைவழியாக்கியின் செயற்பாடு என்பவற்றில் இயங்கக்கூடியது.

‘த நியூயோர்க் டைம்ஸ’; இணையத்தளத்தினை பழைய ஒபேரா உலாவியில் திறந்தபோது முழுமையாக திறப்பதற்கு 4.19 செக்கன்கள் எடுத்துள்ளன. ஆனால் புதிய பதிப்பினூடு 0.01 செக்கன்களில் அந்த இணையத்தளம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் இப்புதிய உலாவியினை ஆரம்பிக்கும் வேகமும் 13 சதவீதத்தினால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில்; அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியான ஒபேரா ஏனைய உலாவிகளில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வேகம் காரணமாக பயன்பாடு குறைவடைய ஆரம்பித்தது.
எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் ஒபேரா நிறுவனம் இறங்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg