Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைகளுக்காக குரல் கொடுப்பது தேசத்துரோகம் அல்ல: சி.வி விக்னேஸ்வரன்

In இலங்கை
Published: 12:08 GMT, Feb 10, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Elakkiya

எம்மை பயங்கரவாதிகளாக பார்க்கும் சிங்கள சகோதரர்கள் எங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது குற்றச் செயல் அல்ல என்பதையும் தேசத்துரோகம் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கின்றது. 6 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமும் தொடர்ந்து அமுலில் இருக்கின்றது. இவ்வாறு இருக்க நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்கின்றீர்கள் என்றால் நீங்கள் பயங்கரவாதிகள் அல்லாமல் வேறு யார் என்றுதான் தொடர்ந்துவரும் அரசாங்கங்களின் கேள்வியாக உள்ளது.

உரிமைகள் அற்றவர்கள்தான் உரிமைகளையும் உரித்துக்களையும் கேட்பார்கள்.

எமக்கான உரிமைகள் இருந்தால் எதற்காக வெய்யிலில் கருகி குளிரில் கொடுகி மழையில் நனைந்து போராட வேண்டும். அவை இல்லாதததால்தான் இந்தப் போராட்டம். இதனை சிங்கள சகோதர சகோதரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கடுமையான சட்டங்களாலும் இராணுவப் பிரசன்னங்களாலும் அரசியல் யாப்பு அனுசரணைகளுடனும் உரிமை மறுப்பைச் சாதித்து வந்துள்ளார்கள்.

சர்வதேச பிரசன்னம், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள் எவருடைய பிரசன்னங்களும் இல்லாது இறுதிப்போர் சர்வதேசப் போர் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை சிங்கள மக்கள் உட்பட முழு உலகமும் அறியும்.

இறுதி யுத்தத்திலே விடுதலைப் புலிகள் மட்டுமல்ல சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்டார்கள்.

கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை எந்த வித மனச்சாட்சியும் இல்லாது மிக சொற்ப தொகையாக திரிவுபடுத்தப்பட்டு சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டப்பட்டது’ என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg