Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 15:52 GMT, Feb 10, 2017 | Published: 15:52 GMT, Feb 10, 2017 |
0 Comments
1158
This post was written by : Vithushagan

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ஒன்றிணைந்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கேப்பாப்பிலவு மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி 11 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில், வவுனியாவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே ரத்துசெய், தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்ன? நாட்டில் நடப்பது நல்லாட்சியா காட்டாட்சியா போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எஸ்.மயூரன், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_1427-696x464 IMG_1461

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg