Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 17:49 GMT, Feb 10, 2017 | Published: 17:34 GMT, Feb 10, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : elayathambi
France 1

பிரான்சின்  தென்பகுதி  நகரான  மொன்ந் பிலியே நகரில் தற்கொலை குண்டுத்  தாக்குதல்  ஒன்றை  நடத்தும் சதித்திட்ட முயற்சியொன்றை  தாம் முறியடித்துள்ளதாக பிரெஞ்சு  காவற் துறையினர்  அறிவித்துள்ளனர்.

இந்த சதி முயற்சி  தொடர்பாக  16 வயதுப் பெண்  உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது

Drump

அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம் பிறப்பித்த பயணத்தடை மேலும் ஒரு புதிய சட்ட்ச் சிக்கலை சந்திக்கவுள்ளது.

அமெரிக்காவின் மேன்முறையீட்டு  நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில்; டொனால்ட் ட்ரம் பிறப்பித்த பயணத் தடைக்கு எதிரான முடிவு வெளிப்பட்ட நிலையில்  வேர்ஜினியா மாகாண சட்டவாளர்களின் தரப்பில் புதிய  நகர்வு எடுக்கபடவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

_94259085_1d35ce87-bab1-484c-99e8-db86429e1de6

ஹொங்கொங்கில் நிலக்கீழ் தொடரூர்ந்து வண்டி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட நாசகார எரிகுண்டுத் தாக்குதலில் 11 பேர்  தீக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இனந்தெரியாத நபர் ஒருவர் பயணிகள் நிறைந்திருந்த தொடருந்து பெட்டி ஒன்றின் மீது பெற்றோல் குண்டு ஒன்றை வீசியதாக தெரிவிக்கபடுகிறது

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமைகோரவில்லை

shinzo-abe-donald-trump-handshake-zoom-af43b2b0-0a73-4493-b6a5-52e03df41500

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தலைமையமைச்சர் சின்சோ அபே இன்று அரச தலைவர் டொனால்ட் ரம்பை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

பிரித்தானிய தலைமையச்சர் திரேசா மே க்கு பின்னர் அதிகாரபூர்வமாக டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் இரண்டாவது உலகத்தலைவராக  ஜப்பானிய தலைமையமைச்சர் பதிவுபெறுகிறார்.

10IN_THVLR_IRAN_RE_3130989f

ஈரானில் 1979-ம் ஆண்டு  இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சியின் 38 ஆம் ஆண்டு பேரணிகள் ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என்ற கருப்பொருளில் இடம்பெற்றுள்ளன.

தெஹ்ரானில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ஈரானிய அரசதலைவர் ஹசன் ரூஹானி, ‘அமெரிக்காவின் போர் ஆக்ரோசத்தை ஈரான் பொறுத்துக் கொள்ளாதெனவும் எச்சரித்துள்ளார்.

ஈரானிய அரச தொலைக்காட்சியில் டொனல்ட் ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ஆகியோரது உருவபொம்மைகள் எரிக்கப்படும் காட்சிகளும் ஒளிபரப்பாகின

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg