Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது: ஓ.பி.எஸ். உறுதி

In இந்தியா
Updated: 04:26 GMT, Feb 11, 2017 | Published: 04:26 GMT, Feb 11, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : Risha
panneerselvam-new-chief-minister-of-tamilnadu

அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘யாராலும் எந்த சுயநல சக்திகளாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை கைப்பற்ற முடியாது. கைப்பற்றுவதற்கும் நாங்கள் விடமாட்டோம்.

இந்த இயக்கம் அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்களின் சொத்து. யாருடைய குடும்ப சொத்தும் அல்ல. இதனை யாருடைய குடும்ப சொத்தாக்க தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இதற்காக உறுதியேற்று நாம் அனைவரும் ஒருமித்த உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம்.

கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது10 என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg