Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ் உடன் தொடர்பு வைத்திருந்த அமெரிக்காவின் முன்னாள் படைவீரருக்கு 11 வருட சிறை தண்டனை

In
Updated: 04:55 GMT, Feb 11, 2017 | Published: 04:55 GMT, Feb 11, 2017 |
0 Comments
1301
This post was written by : Sylviya

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு 11 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் ஜலோஹ் (Mohamed Jalloh) என அழைக்கப்படும் 27 வயது மதிக்கத்தக்க முன்னாள் வீரருக்கே மேற்குறித்தவாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆண், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு பொருட்கள் வழங்கி உதவி புரிந்தமையை  ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் அவர் லிபியாவுக்கு பயணம் செய்து அங்குள்ள அமெரிக்க துருப்புக்களை சுட்டுக்கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜலோஹ் குறித்து மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர் 2015 ஆம் ஆண்டு ஆபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு நைஜீரிய ஐ.எஸ் தீவிரவாதிகளை சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மொஹமட் ஜலோஹ், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட ஆரம்பித்தமை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க நீதித்துறை, முஸ்லிம் மதகுரு அன்வர் அல் – அவ்லாஹியின் (Anwar al-Awlaki) போதனைகளை செவிமடுத்ததன் பின்னரே  தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஜலோஹ் செயற்பட ஆரம்பித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg