Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 05:00 GMT, Feb 11, 2017 | Published: 05:00 GMT, Feb 11, 2017 |
0 Comments
1533
This post was written by : Risha

ல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தை சமூக வலைத்தளங்களுக்கூடாக இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் தனது ஆதரவை வழங்கியுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேர கவனயீர்ப்பு போராட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, ‘நாமே எமக்கு காப்பு, இராணுவத்தை வெளி நீக்கு’, ‘மக்கள் பசியில் படை வளர்ப்பது தான் நல்லிணக்கமா? நல்லாட்சியா?’, ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’, ‘கொய்யா சாப்பிடும் அணிலு, கேப்பாப்பிலவு சாப்பிடுறான் ரணிலு’, ‘எமது நிலத்தை எமக்கு திருப்பித் தா’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பி வருகின்றனர்.

போராட்ட முடிவில், ஒரு தொகுதி இளைஞர்கள் யாழிலிருந்து கேப்பாப்பிலவு சென்று, அங்கு தொடர்ந்தும் 12ஆவது நாளாகவும் போராடி வரும் மக்களுக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளனர். இதற்கான பேருந்து ஒழுங்குகளை இன்றைய போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

jjj1jjj2jjj3jjj4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg