Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக யூனிஸ்கான்?

In கிாிக்கட்
Published: 06:02 GMT, Feb 11, 2017 |
0 Comments
1337
icon_com
This post was written by : Anojkiyan
Younis-Khan-1

தோல்வியின் எதிரொலியால் கடும் நெருக்டிக்குள்ளாகியுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவருக்கு பதிலாக அணியின் சிரேஷ்ட வீரர் யூனிஸ்கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மிஸ்பா, அணித்தலைவர் பதவியில் நீடிக்க பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமும், பயிற்சியாளர் மிக்கே ஆர்தரிடமும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், மிஸ்பா மிக விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகின்றது.

இதனால், யூனிஸ்கான் அணித்தலைவராகவும், சர்பிராஸ் ஹமட் துணை அணித்தலைவராகவும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்பிராஸ் ஹமட் ரி-ருவென்ரி அணித்தலைராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் பாகிஸ்தான் அணி, அணியில் அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றது.

அந்தவகையில், அசார் அலி தனது ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியையும், டெஸ்ட் அணியின் துணை தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ததையடுத்து, விக்கெட் காப்பாளர் சர்பிராஸ் ஹமட்டை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இதற்கு பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg