Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக சாதனை

In இந்தியா
Updated: 05:26 GMT, Feb 11, 2017 | Published: 05:25 GMT, Feb 11, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Elakkiya
tg

மணல் அரண்மனை சிற்பத்தினை வடிவமைத்து ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக சாதனை படைத்துள்ளார்.

பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட இந்த மணல் அரண்மனை சிற்பம் உலக அமைதியை வலியுறுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்பது நாட்களாக 45 மாணவர்களின் உதவியுடன் 48 அடி உயரத்திற்கு இந்த அரண்மனை மணல் சிற்பத்தினை பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக 45 அடி 10 இன்ச் உயரத்தில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மணல் அரண்மனை சிற்பமே சாதனையாக இருந்தது.  இந்த சாதனையை சுதர்சன் பட்நாயக் தற்போது முறியடித்துள்ளார்.

சுதர்சன் பட்நாயக்கின் சாதனை மணல் சிற்பத்தை ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை அமைப்பின் இந்திய பிரதிநிதி ஸ்வப்னில், சாதனையை அங்கீகரிப்பதற்கான சான்றிதழை வழங்கி வைத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg