Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு?

In இந்தியா
Updated: 06:20 GMT, Feb 11, 2017 | Published: 06:12 GMT, Feb 11, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Elakkiya
pandiyarajan

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகின்ற நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதுவரைக்கும் அ.தி.மு.க பொதுச் செலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துவரும் பாண்டியராஜன், தொகுதி மக்களின் கருத்துக்களுக்கு இணங்க தீர்மானிப்பேன் என்றும், மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பேன் என்றும் அ.தி.மு.கவின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு தகுந்த முடிவு எடுப்பேன் என்றும் தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரின் பதிவிட்டுள்ள இவருடைய கருத்தினால் அவர் கட்சி மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை அமைச்சர் பாண்டியராஜன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg