Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மக்களின் ஜீவனோபாயம் குறித்து அரசு பாராமுகமாக செயற்படுகிறது: ரில்வின் சாடல்

In இலங்கை
Published: 06:51 GMT, Feb 11, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Risha

இந்திய மீன்பிடியாளர்களின் ஊடுருவல்களால் ஜீவனோபாயத்தை இழக்கும் அபாயத்தில் உள்ள வட மாகாண மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக செயற்பட்டு வருகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சிய தொண்டமான்நகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘எமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில், தெற்கு மற்றும் வடக்கு மக்களின் பாரிய பங்களிப்புடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்தி, புதிய நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள போதிலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டதாக இல்லை. நாம் தொடர்ந்தும் பிரச்சினைகளுடனேயே காலத்தை கடத்தி வருகின்றோம்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பொருளாதார சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு கடந்த கால ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை கண்டறியும் என்றும் பொதுமக்களின் பணம் சூரையாடப்படுவது இனிமேலாவது நிறுத்தப்படும் எனவும் அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் இந்த அரசிலும் ஊழல் மோசடிகள் தொடர்வதை கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

இந்திய மீனவர்கள் வடக்கு கடற்கiரை பகுதிகளில் ஊடுருவி வருவதால், வடக்கு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக காணப்படும் மீன்பிடித் தொழிலை முன்னெடுத்து செல்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது குறித்து மீனவ சமுதாயத்தினர் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்ற போதிலும், வடக்கு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முன்வந்ததாக இல்லை.

மாறாக இந்தியாவை எதிர்க்க முடியாமல், இந்தியாவிற்கு சாதகமான நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்து வருகிறதே தவிர எம்மக்களின் நிலை குறித்து பாராமுகமாகவே அரசு செயற்பட்டு வருகிறது’ என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg