Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் ட்ரம்புக்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம்

In
Updated: 06:51 GMT, Feb 11, 2017 | Published: 06:48 GMT, Feb 11, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Sylviya
0 7 - 1

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை “த ஸ்கொட்லன்ட் அகெய்ன்ஸ்ட் ட்ரம்ப்” (The Scotland Against Trump) எனும் குழுவே ஒழுங்கமைத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேற்குறித்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க துணைத்தூதரகம் மற்றும் ஸ்கொட்லாந்து நாடளுமன்றம் ஆகியவற்றை நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்கொட்லாந்தின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர்களின் போக்குவரத்து பணிகளின் நிமித்தம் பேரூந்து சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக பதவியேற்று ஓரிரு நாட்களிலேயே குடியேற்றவாசிகள் மற்றும் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வரமுடியாத வகையில் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

குறித்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பயணத் தடைக்கு அமெரிக்காவின் சியேட்டல் பகுதி நீதிபதியினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த தடைக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்த போதும் அது மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

07 - 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg