Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்மானத்தை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மேயிற்கு நிக்கோலா கடிதம்

In
Updated: 07:29 GMT, Feb 11, 2017 | Published: 07:29 GMT, Feb 11, 2017 |
0 Comments
1289
This post was written by : Sylviya

குடியேற்றவாசிகளாக வரும் சிறுவர்கள் தொடர்பில் மேற்கொண்ட தீர்மானத்தை மாற்றியமைக்குமாறு ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் பிரதமர் தேரேசா மேயிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குடியேற்றவாசிகளுக்கு உதவி புரியும் வகையில் உருவாக்கப்பட்ட டப்ஸ் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்தே நிக்கோலா குறித்த கடித்தை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டப்ஸ் திட்டமே குடியேற்றவாசிகளாக வரும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமைந்திருந்தது எனவும் அதனால் அந்த திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படக் கூடாது எனவும் குறித்த கடிதத்தில் நிக்கோலா தெரிவித்துள்ளார் என அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும் இந்த டப்ஸ் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த உட்துறை செயலாளர் ஏம்பர் ரூட் (யுஅடிநச சுரனன), குறித்த திட்டம் ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, பெற்றோரின் துணையற்ற சுமார் 90,000 சிறுவர்கள் ஐரோப்பாவில் உள்ளனர் என அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg