Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் உத்தரவை மீறி வெளிநாடு சென்றுள்ள சைட்டம் பிரதானி

In இலங்கை
Updated: 07:34 GMT, Feb 11, 2017 | Published: 07:33 GMT, Feb 11, 2017 |
0 Comments
1069
icon_com
This post was written by : Risha
Malabe-SAITM-CEO-Sameera-Senaratne-538x300

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான சர்ச்சைக்குரிய மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொலிஸாருக்கு அறிவிக்காது இரகசியமாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அவர் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவர் மயிரிழையில் உயிர்தரப்பினார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர் வெளிநாட்டிற்கு செல்வதாக இருப்பின் பொலிஸாருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திப்பட்டிருந்த நிலையிலேயே அவர் வெளிநாட்டிற்கு பயணித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேவைப்படின் அவரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் சமீர சேனாரத்ன நேற்றைய தினமே வெளிநாட்டிற்கு பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg