Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்தாத்தின் இலாம் மாவட்டத்தில் கார் குண்டுத் தாக்குதல்: 09 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்

In உலகம்
Updated: 08:58 GMT, Feb 11, 2017 | Published: 08:53 GMT, Feb 11, 2017 |
0 Comments
1309
This post was written by : Sylviya

தெற்கு பக்தாத்தின் இலாம் மாவட்டத்தில் (Ilam district) நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த குண்டுத் தாக்குதலினால், பல கட்டிடங்கள் சேதமுற்றுள்ளதாகவும் மக்கள் அச்சமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், ‘நாம் அனைவரும் சந்தைப்பகுதிக்கு அருகே கூடியிருந்த போதே குறித்த குண்டு வெடித்தது. அதனைத் தொடர்ந்து நாம் அங்கிருந்து உடனடியாக வெளியேறினோம்.  குறித்த குண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்’ என தெரிவித்தார்.

நேற்று அதிகாலையிலும், பாக்தாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் 15 பேர் காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg