Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

In இலங்கை
Updated: 09:36 GMT, Feb 11, 2017 | Published: 09:36 GMT, Feb 11, 2017 |
0 Comments
1112
This post was written by : Vithushagan

பாரிய நீர்பாசன திட்டங்களுக்குட்பட்ட விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக விசேட வேலைத் திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்கீழ் விவசாயிகளின் அறுவடைகளுக்கு நேரடி மற்றும் நிலையான வர்த்தக சந்தை ஒன்று ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

54 பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.   தனியார் துறையுடன் இணைந்து தேசிய மட்டத்திலான ஒன்றிணைந்த நடவடிக்கை இது தொடர்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார்.

இதற்கமைவாக விசாயிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு இடையில் தேசிய அமைப்பொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அமைப்பு இம்மாதத்திற்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நீர்ப்பாசனத்துறை முகாமைத்துவ பணிப்பாளர் சந்திரிகா எத்துகல இது தொடர்பாக தகவல் தருகையில் ’புதிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஊடாக புதிய விவசாய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக சந்தை தொடர்பான தகவல்கள் விவசாயிகள் மத்தியில் முன்னெடுக்கப்படும்’ என்றார்.

தேசிய இணைப்பு அமைப்பு 200 விவசாய தலைவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை சேர்ந்த 200 பேரையும் கொண்டதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg