Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை: கமல்ஹாசன்

In சினிமா
Updated: 09:49 GMT, Feb 11, 2017 | Published: 09:48 GMT, Feb 11, 2017 |
0 Comments
1203
This post was written by : Elakkiya

சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை. அவரது இந்த முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நான் அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கவனமாக கண்கானித்து வருகிறேன்.

என்னுடைய கருத்துக்களை யாரும் தமக்கு சாதமாக்கி வேடிக்கை பார்க்ககூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். கடந்த 40 வருடங்களில் எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு சேவை செய்ததாக தெரியவில்லை.

நாங்களெல்லாம் ஆடுகள் கிடையாது எங்களை மேய்க்க நல்ல ஒரு மேய்ப்பாளர் தேவை என கோரிக்கை வைக்கவில்லை. மிகவும் உழைக்கும் எங்களுக்கு நல்ல உழைப்பாளிகள் தான் வேண்டும்.

பன்னீர் செல்வம் இன்னும் சில வருடங்கள் ஆட்சியை தொடர்ந்தால் என்ன? அவரது ஆட்சி திறமையற்ற ஆட்சிபோன்று இருப்பதாக தெரியவில்லை. எனினும் அதனை மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்காக நான் அவரின் ஆதரவாளர் என நினைத்து விடாதீர்கள்.

நான் மக்களின் ரசிகனே தவிர யாருக்கும் தலைவன் இல்லை’ என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg