Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயிலில் திடீரென பரவிய தீ: 11 பேர் காயம்

In உலகம்
Updated: 12:11 GMT, Feb 11, 2017 | Published: 12:04 GMT, Feb 11, 2017 |
0 Comments
1264
This post was written by : Sylviya

ஹொங்கொங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரயில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொது ஒலிபரப்புச் சேவை நிறுவனம் ஒன்று, அந்த ரயிலில் பயணித்தவர் ஒருவர்  தனக்குத்தானே தீ மூட்டியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம், தீவிரவாதத்துடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தீவிரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “விக்டோரியா துறைமுகத்திலிருந்து Tsim Sha Tsui  எனும் பகுதிக்கு சென்ற ரயிலில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம். திடீரென ரயிலின் பல பகுதிகள் புகையால் நிரம்ப ஆரம்பித்தது. நாங்கள் மிகவும் அச்சமுற்றோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg