Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி வீதிகளில் நெல் உலரவிடும் அவலம்

In இலங்கை
Updated: 16:26 GMT, Feb 11, 2017 | Published: 16:17 GMT, Feb 11, 2017 |
0 Comments
1142
This post was written by : Vithushagan

கிளிநொச்சியில் தற்போது காலபோக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் இவ் வருடமும் காப்பெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாத காரணமாக வீதிகளில் நெல்லினை காய வைப்பதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயக் குழுக் கூட்டங்களில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாத காரணமாகவே ஈரமாக நெல்லினை விற்பனை செய்வதாகவும் ஒவ்வொரு கமக்கார அமைப்புக்கும் குறைந்தது நெல் உலர வைப்பதற்கான ஒரு தளத்தினையாவது அமைத்துத் தாருங்கள் என விவசாயிகளினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும் அவை நிறைவேறாததன் காரணமாகவே விவசாயிகள் நெல்லினை வீதிகளில் உலர வைக்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடங்களிலும் இவ்வாறான நிலமை காணப்பட்டது, இதனால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg