Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலமைப்பு விடயம்- சட்டத்தரணிகள் சங்கத்தின் கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 17:44 GMT, Feb 11, 2017 | Published: 17:43 GMT, Feb 11, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Vithushagan
16706902_1282713775175478_1397368294_n

அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய மற்றும் பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கை பற்றிய பொதுக் கலந்துரையாடல்  இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடல்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி குமரேசன் புரந்ததன் தலைமையில்     நடைபெற்றது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய பிராந்திய உறவுகள் சம்பந்தமான  அறிக்கையில் உள்வாங்கபட்ட தனிநபர், சமுதாயம் சார்ந்தவிடயங்கள் மற்றும் குறித்த அறிக்கையில் உள்வாங்கப்பட்ட சர்வ கட்சி பிரதிநித்துவம் போன்ற விடயங்களை அனைத்து மக்கள் சார்ந்த பிரிவினருக்கும் தெளிவுபடுத்தும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.

கலந்துரையாடலில்  அரசியல் அமைப்பு சட்ட சபையின் செயற்குழு உறப்பினர்  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பேராதனை பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர்  சேனாரத்தின, யாழ் பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg