Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் விவகாரம்: நிபுணர்கள் குழுவில் பலனில்லை

In இலங்கை
Updated: 18:09 GMT, Feb 11, 2017 | Published: 18:05 GMT, Feb 11, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Vithushagan
625.500.560.350.160.300.053.800.900.160.90

சைட்டம் நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நிபுணர்கள் குழுவை தற்பொழுது நியமிப்பதில் எந்த விதமான பயனும் இல்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவ்வொன்றியம் இதனைக் கூறியுள்ளது.

இதற்கு முன்னரும் நிபுணர்கள் குழு நியமித்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற ஒரு வேலையைத் தான் தற்பொழுது மீண்டும் செய்துள்ளதாகவும் அவ்வொன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சைட்டம் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவிக்க ஜனாதிபதியுடன்  தங்களது அமைப்புக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரும்படி அவ்வொன்றியம் இன்று எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஒன்றியம் கூறியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg