Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்’ நிகழ்வு இனிதே நிறைவு

In இலங்கை
Updated: 04:26 GMT, Feb 12, 2017 | Published: 04:21 GMT, Feb 12, 2017 |
0 Comments
1311
This post was written by : Varshini

‘ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்த விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார இறுதி நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிறைவடைந்தது.

ஏறாவூர் நகரில் இன்று காலை வீதி உலா இடம்பெற்று, ஏறாவூர் பொலிஸ் நிலைய முன்னரங்கில் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.

கடந்த ஒரு வாரகாலமாக ஆறு கட்டங்களாக இடம்பெற்ற விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகளில் சகல தரங்களிலுமுள்ள அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் தேகாரோக்கியப் பயிற்சியளிக்கப்பட்டதாக விளையாட்டு உத்தியோகத்தரும் பயிற்சியாளருமான எம்.எம்.எம். ஜெலீல் தெரிவித்தார்.

இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸார், இளைஞர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

health (5) health (2) health (4) health (3) health (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg