Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

In இந்தியா
Updated: 07:18 GMT, Feb 12, 2017 | Published: 04:28 GMT, Feb 12, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Shailu
thirunavukkarasar

தமிழ்நாட்டில் நிலையான அரசு இல்லாத நிலையில் ஆளுநர், அரசியல் சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழகத்தில் ஒரு நிரந்தரமான, நிலையான அரசு இல்லை. ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்த பின்னர் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு, குழப்பங்களுக்கு அரசியல் சட்டப்படி, சட்டமன்ற, பாராளுமன்ற விதிகளின்படி நிலையான அரசை ஏற்படுத்த ஆளுனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை தொடர்பில், ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. சசிகலா, பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் காங்கிரஸ் கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை. அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.

மத்திய அரசு ஆளுனரை நிர்ப்பந்திக்கக் கூடாது. அரசியல் சட்டப்படி எது நியாயமோ, அதன்படி சுதந்திரமாக செயல்பட்ட வேண்டும்.

சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக யாருக்கு உள்ளது என்பதை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்த வேண்டும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg