Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய அணி இந்தியாவிடம் தொடரை இழக்கும் என்கிறார் கங்குலி

In கிாிக்கட்
Published: 04:47 GMT, Feb 12, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Surenth
Sourav Ganguly

இந்திய அணியிடம் அவுஸ்ரேலிய அணி தொடரை தோற்று வைட் வோஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என முன்னாள் இந்திய அணியின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தியா வரவுள்ள அவுஸ்ரேலிய அணியுடனான தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். ஏற்கனவே நான் சொல்லி இருக்கின்றேன் கிரிக்கெட்டில் என்னால் சரியாக ஊகித்து சொல்ல முடியாது என்று.

ஆனால் இந்த தொடரை பொறுத்த வரைக்கும் அவுஸ்ரேலிய அணி 0-4 என தோற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கடந்த 25 வருடங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் சுழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தின் மூலம் வெற்றி பெற்று வருகின்றது.

சுழல் பந்து வீச்சில் ஒருவர் போக இன்னுமொருவர் வந்து கொண்டு இருக்கின்றனர். நான் அணித்தலைவராக இருந்த காலத்தில் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய சிறந்த சுழல் பந்து வீச்சியாளர்கள் இருந்தார்கள்.

அதேபோல தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரிடம் பந்தை கொடுத்தாலும் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுப்பார்கள்.

அத்துடன் அமித் மிஸ்ரா அணியில் இடம்பிடித்தால் அவரும் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நினைக்கின்றேன். அத்துடன் யுவேந்திர சாஹல் மற்றும் ஜயந்த ஜாதவ் ஆகியோருக்கும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும்” எனவும் இதன் போது குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg