Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணம் குறித்து சகாயம் தலைமையில் விசாரணை ஆணையகம் தேவை: சுங்கத்துறை அதிகாரி

In இந்தியா
Updated: 05:18 GMT, Feb 12, 2017 | Published: 04:48 GMT, Feb 12, 2017 |
0 Comments
1455
This post was written by : Shailu

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சுங்கத்துறை அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை திருவொற்றியூரை சேர்ந்த சுங்கத்துறை உதவி ஆணையாளர் பா.பாலமுருகன் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கையளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தை நேர்மையும், துணிவும், திறமையும் கொண்ட தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு விசாரணை ஆணையகம் அமைக்க வேண்டும்.

இதன் முலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என கடந்த 2.1.2017 அன்று சேலம் மாவட்ட ஆட்சியாளர் மூலமாக தங்களுக்கு மனு ஒன்றை அளித்தேன். அத்தோடு குறித்த மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிலும் சமர்ப்பித்தேன்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்கள் மனதில் சந்தேகம் இருக்கிறது. எனவே உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்கப்படும் என நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை என்பது உங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல எனவே ஐ.ஏ.எஸ். அதிகாரி யு.சகாயம் தலைமையில் விசாரணை ஆணையகம்; என்பது உங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்டது.

சகாயம் தலைமையிலான விசாரணை ஆணையகம் திறமையாகவும், துணிவுடனும் செயல்பட்டு ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள முழு உண்மையையும் வெளிகொண்டுவர உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று அவர் தெரித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg