Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார்: சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

In விளையாட்டு
Updated: 06:52 GMT, Feb 12, 2017 | Published: 05:42 GMT, Feb 12, 2017 |
0 Comments
1265
icon_com
This post was written by : Shailu
sunil gavaskar-kohli

கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் இந்திய அணி தலைவர் விராட் கோலி முறியடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவரும், தொலைக்காட்சி வர்னணையாளருமான சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தலைவர் விராட் கோலி 204 ஓட்டங்களை பெற்று இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவரும், தொலைக்காட்சி வர்னணையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

‘பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் விராட் கோலி அதிரடியாக விளையாடுகிறார். அவர் தனக்கு எதிராக வீசப்படும் பந்துகளை அடக்கி விடுகிறார்.

தொடர்ந்து நிலையாக விளையாடுவது அவரது வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.கிரிக்கெட்டில் உள்ள அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார். அவர் ஒரு சகாப்தமாக உருவெடுத்து வருகிறார்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் 4-வது இரட்டை சதத்தை விராட் கோலி பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 தொடர்களில் 4 இரட்டை சதம் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு பிராட் மேன், டிராவிட் ஆகியோர் 3 தொடர்களில் 3 இரட்டை சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg