Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்சை உலுக்கிய நிலநடுக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழப்பு-80க்கும் மேற்பட்டோர் காயம்

In
Published: 06:57 GMT, Feb 12, 2017 |
0 Comments
1302
icon_com
This post was written by : Anojkiyan

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுகள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மின்டானாவ் தீவில் உள்ள சுரிகாவ் நகரை 6.7 ரிக்டர் அளவுகோலில் உலுக்கிய சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகள் தரைமட்டமாகின.

அத்தோடு, சுரிகாவ் நகரில் ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவிவருகிறது. நிலநடுக்கத்தால் சுரிகாவ் நகரில் உள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதையில் விரிசல்கள் ஏற்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

முதலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக 89 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg