Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 07:23 GMT, Feb 12, 2017 | Published: 07:23 GMT, Feb 12, 2017 |
0 Comments
1484
This post was written by : Varshini

மக்களை தெருவில் பதைபதைக்க வைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதா நல்லாட்சியின் நகர்வு என கேள்வியெழுப்பியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காய் கடந்த இரண்டு வார காலமாக இரவு பகலாக வீதியே கதியென போராடிவரும் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்று துன்பங்களையும் இழப்புகளையும் சந்தித்த இம் மக்கள், தற்போது தமக்கான தீர்வை வேண்டி பனியிலும் வெயிலிலும் வீதியோரத்தில் தவம் கிடக்கின்றனர் எனத் தெரிவித்த வியாழேந்திரன், மீள்குடியேற்றம் என்ற பெயரில் இம்மக்கள் குடியேற்றப்பட்டபோதும் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென தெரிவித்தார்.

நல்லாட்சியிலாவது தமது நிலங்கள் மீளக் கிடைக்குமென இம் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்பிரச்சினை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை கவலையளிப்பதாக குறிப்பிட்டார்.

பொதுமக்களின் 534 ஏக்கர் காணிகள் இவ்வாறு விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய வியாழேந்திரன், காலத்தை இழுத்தடிக்காமல் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg