Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுனருக்கு கால அவகாசம் தேவை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிப்பு

In இந்தியா
Published: 07:41 GMT, Feb 12, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Surenth

சரியான முடிவு எடுப்பதற்காகவே ஆளுனர் கால அவகாசம் எடுத்துக் கொள்வதாகவும் காலத்தை வீணடிக்க அவர் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில், ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் சுப்ரமணியன் சுவாமியின் பாதை தமிழக பாரதீய ஜனதாவின் பாதை அல்ல எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பாரதீய ஜனதா கட்சியின் கருத்து அல்ல எனவும் அந்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து எனவும் தமிழிசை சவுந்தரராஜன் மேலும் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு முதலமைச்சரை நியமிப்பதற்காக சரியான முடிவு எடுக்க கால அவகாசம் எடுத்து கொள்கிறார் என்றும் ஆளுனர் என்பவர் வெறுமனே பதவி பிரணாம் செய்து வைப்பது மட்டும் அல்ல அவரது பணி எனவும் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg