Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

In இந்தியா
Updated: 08:49 GMT, Feb 12, 2017 | Published: 08:49 GMT, Feb 12, 2017 |
0 Comments
1177
This post was written by : Anojkiyan

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இன்று அதிகாலை காஷ்மீரின் யாரிபோரா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எல்லையில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் பின்வாங்கி தப்பிச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகின்றது. இதனால், அப்பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg