Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸ்யின் அணியில் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைவு

In இந்தியா
Updated: 08:16 GMT, Feb 12, 2017 | Published: 08:15 GMT, Feb 12, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Surenth
Panneerselvam

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் வரை 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன்படி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜ் ஆகிய 3 பேருமே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பின்பர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் பன்னீர்செல்வம் அணியின் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg