Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்வர் பிரச்சினைக்கு நாளைக்குள் முடிவு இல்லையெனில் வழக்கு தொடருவேன்: சு.சுவாமி மிரட்டல்

In இந்தியா
Updated: 10:05 GMT, Feb 12, 2017 | Published: 09:39 GMT, Feb 12, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Anojkiyan
sup

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் நாளைக்குள் சசிகலா பதவியேற்பு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் வழக்குத் தொடருவேன் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி மிரட்டியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டதிலிருந்தே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சுப்பிரமணியம் சாமி, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ்க்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

முதல்வர் பிரச்சினை தொடர்பாக தமிழக ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குதிரை பேரத்தை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது அரசியல் சாசனச் சட்டம் 32வது பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும். என பதிவிட்டுள்ளார்.

அண்மையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி, நேற்று ஆளுநரையும் சந்தித்து சசிகலாவுக்காக வாதாடினார். ஆனால் அது கைகூடாத நிலையில், அவர் இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg