Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது சிறப்பான ஆட்டத்துக்கு தலைவர் பதவியே காரணம்: விராட் கோலி

In கிாிக்கட்
Updated: 10:17 GMT, Feb 12, 2017 | Published: 10:17 GMT, Feb 12, 2017 |
0 Comments
1317
This post was written by : Shailu

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த விராட் கோலி, தனது சிறப்பான ஆட்டத்துக்கு தலைவர் பதவியே காரணம் என தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தலைவர்; விராட் கோலி இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். இது குறித்து கருத்த தெரிவித்த விராட் கோலி கூறுகையில்,

‘தற்போது நான் டெஸ்ட் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். நான் எப்போதுமே நீண்ட நேரம் நிலைத்து விளையாடவே விரும்புகிறேன்.

எனது முதல் 7 அல்லது 8 சதம் 120 ஓட்டங்களுக்கு மேல் தாண்டியது இல்லை. இதற்கு சாதாரணமான துடுப்பாட்ட வீரனாக இருக்கும் போது இந்த நிலை மெத்தனம் நிலை காரணமாக இருக்கலாம்.

நான் தற்போது தலைவராக இருப்பதால் பொறுப்புடன் ஆடுகிறேன். நீண்ட இன்னிங்சில் விளையாடுகிறேன். இதற்கு தலைவர், பதவி மற்றும் நல்ல உடல் தகுதியே முக்கிய காரணம்.

அணியின் தலைவராக இருப்பதால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.எனது உடல் தகுதியில் நான் மிகவும் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன்.

சதம் அடித்ததும் திருப்தி அடைந்து விடவில்லை. மிகப்பெரிய ஓட்ட இலக்கை அடைய வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. இதனால் ஓட்டங்களை குவித்து சிறப்பாக ஆட முடிகிறது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

4 டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி தொடர்ச்சியாக இரட்டை சதம் அடித்தார். இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதத்தை பதிவு செய்து இருந்தார்.

அந்தவகையில், 4 தொடர்களில் தொடர்ச்சியாக 4 இரட்டை சதம் அடித்த உலகின் ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg