Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிஸில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 11:10 GMT, Feb 12, 2017 | Published: 11:09 GMT, Feb 12, 2017 |
0 Comments
1401
This post was written by : Sylviya

பிரான்ஸ் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பரிஸில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது வெடிக்கக் கூடிய பொருட்களை வீசியதாகவும் அருகில் இருந்த கார்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை தீயினால் எரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பொலிஸார் ஒருவரால் மிகக் கொடூரமான முறையில் ஒருவர் தாக்கப்பட்டமையை தொடர்ந்து கோபத்திற்குள்ளாகியிருந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன்று ஒன்றுதிரண்டதாக பரிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பரிஸ் பொலிஸார், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்துகொண்டதாகவும் அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பின்னர் மோதலில் முடிவுற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் பொதுமக்களில் ஒருவர், ‘பொலிஸாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு தியோ எனும் ஆண் பின்னர் கைது செய்யப்பட்டார். அது தவறுதலாக நடைபெற்ற ஒரு விபத்து என அதற்கு பொலிஸார் விளக்கம் கூறியிருப்பது நியாயமற்றது. அந்த வகையில் பொலிஸாரை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குவது நியாயமே’ என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றுமொருவர் கருத்து தெரிவித்த போது, “அண்மையில் பெண் ஒருவர் பொலிஸாரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். நாம் அனைவரும் பரிஸ் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே கூடியுள்ளோம்” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg