Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்வையற்றோருக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி: இந்தியாவிற்கு சாம்பியன் பட்டம்

In கிாிக்கட்
Updated: 11:08 GMT, Feb 12, 2017 | Published: 11:08 GMT, Feb 12, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Shailu
india blind cricket team

பார்வையற்றோருக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பார்வையற்றோருக்கான ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதிப்போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது.

இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் 198 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்தியா, 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்பு 2007 மற்றும் 2012இல் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg