Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க முக்கிய பிரமுகரும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு?

In இந்தியா
Published: 11:35 GMT, Feb 12, 2017 |
0 Comments
3033
icon_com
This post was written by : Anojkiyan
thambidurai-

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பின்பர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும், ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், மக்களவை துணைத் தலைவரும், அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை விரைவில் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை அளித்ததால் தம்பிதுரை அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகத் கூறப்படுகின்றது.

இதன்காரணமாக அவர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜ் ஆகிய 3 பேரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg