Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எழுக தமிழில் பங்கேற்பதற்கு பெண்கள் அமைப்புகள் துணிந்து முன்வரவில்லை! – வசந்தராசா

In இலங்கை
Updated: 11:23 GMT, Feb 12, 2017 | Published: 11:20 GMT, Feb 12, 2017 |
0 Comments
1432
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Athavan-card-Copy-7-Copy-Copy-1-Copy2 - Copy (6) - Copy - Copy - Copy - Copy - Copy - Copy - Copy

எழுக தமிழில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், எழுக தமிழுடன் இணைந்துகொள்ள பெண்கள் அமைப்புகள் துணிச்சலுடன் முன்வரவில்லையென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான த.வசந்தராசா குறிப்பிட்டுள்ளார்.

அனந்தியின் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு எழுக தமிழில் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்தவர்களை தவிர வேறு யாருக்கும் பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ள வசந்தராசா, அனந்தி தனது அமைப்பை தமிழ் மக்கள் பேரவையுடன் இணைத்துக்கொண்டிருந்தால் அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கலாமென மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கான குரலாக தாங்களே நேரடியாக எழுக தமிழில் உரையாற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை யாரும் முன்வைக்கவில்லையென்றும் அப்படி ஏதேனும் கோரிக்கைகள் வந்திருந்தால் அதனைப் பரிசீலித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள எத்தனையோ பெண்கள் அமைப்புகளை தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தும் பெண்கள் அமைப்புகள் துணிச்சலுடன் முன்வரவில்லையென தெரிவித்த வசந்தராசா, தமிழ் மக்கள் பேரவையை ஓர் ஆயுதக் குழுவென நினைத்து அவர்கள் அச்சப்படுவதைப் போல் தெரிகின்றதென மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எழுக தமிழுக்காக வடக்கிலிருந்து ஊடகவியலாளர்களை அழைத்து வந்த தமிழ் மக்கள் பேரவை, காணாமல் போனோர் சார்பாக கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பெண்களின் குரலும் அங்கு ஒலிக்கவேண்டும் என்பதற்காக ஏற்பாட்டாளர்களிடம் உதவி கேட்டும் அதற்கு இணங்கவில்லையென்ற குற்றச்சாட்டை அனந்தி முன்வைத்துள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்கள் பேரவை தன்னை ஒரு பொருட்டாக கருதவில்லையென குறிப்பிட்டுள்ள அனந்தி, தனக்கு வாய்ப்பளிக்காவிட்டாலும் யாரேனும் ஒரு பெண்ணுக்கேனும் வாய்ப்பு வழங்காத தமிழ் மக்கள் பேரவையில் சமவாய்ப்பு மற்றும் பெண்ணுரிமை பற்றி எவ்வாறு கதைப்பது என்றும் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg