Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினர் கைது

In உலகம்
Updated: 09:39 GMT, Feb 13, 2017 | Published: 11:56 GMT, Feb 12, 2017 |
0 Comments
1259
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினரை கனேடிய பொலிஸார் கைது செய்து தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிரிய குடும்பத்தினர், நேற்று (சனிக்கிழமை) கனடாவில் உள்ள ஹெமிங்ஃபோர்ட் (Hemmingford) பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவில் உள்ள குடியேற்றவாசிகளுக்கு கனடாவில் இருப்பிடம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கனேடிய எல்லைப் படை அதிகாரிகள், “கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் கனடாவுக்கு வந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 368 ஆக காணப்பட்டது. எனினும் குறித்த தொகை டிசம்பர் மாதமளவில் 593 ஆக அதிகரித்தது” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிகரித்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கையாளும் பொருட்டு கனடாவில் உள்ள அமைப்புக்கள் தங்களை தயார்படுத்தி வருவதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

15
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg