Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிடம் 15 வருடமாக சித்திரவதையை அனுபவித்து வந்தேன்: ஓ.பன்னீர் செல்வம்

In
Updated: 16:55 GMT, Feb 12, 2017 | Published: 16:49 GMT, Feb 12, 2017 |
0 Comments
1593
icon_com
This post was written by : Vithushagan
ops_3124618f

15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினரால் துன்பப்பட்டு வந்தேன் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது இல்லத்தில்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், ”ஜெயலலிதாவால் உருவான இந்தக் கட்சிக்கு குந்தகம் ஏற்படுமே என அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். நான் வேண்டாம் எனக் கூறியும் முதல்வராக பொறுப்பேற்க சொல்லிவிட்டு பின்னர் அவமானப் படுத்தினார்கள். 15 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினரால் துன்பப்பட்டு வந்தேன். கட்சியைக் காப்பாற்றவே இந்த முடிவு எடுத்துள்ளேன். தனியாக நின்று நான் போராடுவதை பலர் பெருமையோடு பார்க்கின்றனர். மக்களின் ஆதரவு எங்கள் பக்கமே இருக்கின்றது.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் அடைக்கப்பட்டுள்ள நிலையை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. அங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர்.

கூவத்தூரில் உள்ள  சட்டமன்ற உறுப்பினர்கள்  தன்னுடன் பேசிக் கொண்டு இருப்பதாகவும்  ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 4 பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆதரவும் என் பக்கம் தான் இருக்கின்றது. எங்களது பெரும்பான்மையை சட்டசபையில் நிருபிக்கப்படும்.

சசிகலா முதல்வராக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சசிகலாவின் உறவினர்களை அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு இல்லை என்பதால்தான் அவர்களால் சுதந்திரமாக முடிவெடுக்க முடிகிறது” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg